Buying Options

Kindle Price:    49.00
inclusive of all taxes

includes free wireless delivery via Amazon Whispernet
Read this title for free. Learn more
Read for Free
OR

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Deliver to your Kindle or other device

Deliver to your Kindle or other device

<Embed>
Kindle App Ad
சாருவின் அமேஸான் Vol. 4: தமிழ் எழுத்தாளன் (Tamil Edition) by [நிவேதிதா, சாரு]

சாருவின் அமேஸான் Vol. 4: தமிழ் எழுத்தாளன் (Tamil Edition) Kindle Edition

4.0 out of 5 stars 1 customer review

See all formats and editions Hide other formats and editions
Price
New from
Kindle Edition, 7 Mar 2019
   49.00

Learn more about reading Indian language eBooks

Click here to learn more about reading Indian language eBooks.


Product description

Product Description

ரஜினிகாந்தே ஒரு நாவல் எழுதினால் கூட தமிழ்நாட்டில் 4000 பிரதிகள்தான் விற்கும் என்பது என் அனுமானம்.

***

அந்த வங்கியிலிருந்து காலையில் பேசிய பெண் – அவர் அந்த வங்கியின் மேனேஜர் என்று தெரிந்தது – பேசினார். விபரங்கள் சரியா என்று சோதித்தார். உங்கள் வேலை என்ன என்று கேட்டதும், எழுத்தாளர் என்றேன்.
உரையாடல் தமிழிலேயே நடந்தது. அவர் ஒரு பக்கா தமிழ்ப் பெண் என்பது பெயரிலும் தெரிந்தது. “எழுத்தாளர்னா என்ன சார்?” என்று கேட்டார் அவர்.
“அது வந்து Writing… I am a writer.”
“Writerனா சார்? அது என்ன பிஸினஸ்?”
“பிஸினஸ் இல்லீங்க… எழுதுறது…”
“புரியலியே சார். நீங்க என்ன வேலை செய்றீங்க? இந்த ஃபார்ம்ல உங்க தொழில் writerனு போட்டு இருக்கு. அதனாலதான் கேட்கிறேன்… ஸாரி…”
“ஆமாம். என் தொழில் எழுத்து…”
“சரி சார். எனக்குப் புரியல. அப்படியே விட்டுர்றேன். நீங்க இந்த பிஸினஸை எத்தனை வருஷமா பண்றீங்க?”
“நாற்பது வருஷமா…”
”ஓகே சார். இந்த பிஸினஸுக்கு நீங்கதான் ஓனர்… இல்லீங்களா?”
“ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… அதாவது, என் வெப்ஸைட்ல எழுதினா நான் ஓனர். பத்திரிகையில எழுதினா பத்திரிகை முதலாளிதான் ஓனர்…”
“பத்திரிகை? Like…?”
“Like விகடன்…”
“லைக் விகடன்? ம்ம்ம்…?”
“ஆனா அதுல ராஜு முருகன்னு ஒருத்தர் பர்மெனண்ட்டா எழுதுறதால எனக்குப் பத்து வருஷத்துக்குப் பிறகுதான் சான்ஸ் கிடைக்கும்… So we don’t have to worry…”
“ஓ… விகடனுக்கு ஓனர் ராஜு முருகன்… உங்க வெப்ஸைட் ஓனர் நீங்க? இல்லியா சார்?”
”ஓ மை காட்… ஓ மை ஜீஸஸ்… இன்னும் பத்து வருஷம் கழிச்சு வர்ற வாய்ப்பையும் தட்டிப் பறிச்சிருவீங்க போல இருக்கே… அது ரொம்பப் பெரிய இடம்ங்க…”
“நீங்கதானே சொன்னீங்க… ராஜு முருகன் விகடன்ல பர்மனெண்ட்னு? அதான் கேட்டேன்… அப்போ விகடன் ஓனர்?”
“மிஸ்டர் பா. சீனிவாசன். ஆனா அதுக்கும் எனக்குக் கிரெடிட் கார்ட் குடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? ப்ளீஸ்… என்னை மாட்டி விட்றாதீங்க…”
“இல்லை சார். நீங்க ரைட்டிங் பிஸினஸ் பண்றீங்க… அதுக்கு நீங்கதான் ஓனரா… இல்லே, ஒரு கம்பெனில வொர்க் பண்றீங்கன்னா உங்க Salary Certificate தேவைப்படும்…”
“இல்லிங்க… நான்தான் ஓனர்… விகடன்ல எழுதும் போது…”
“ராஜு முருகன் ஓனர்… அதுதான் சொல்லிட்டீங்களே சார்…”
“ஐயோ… ஐயோ… அது ராஜு முருகன் இல்லீங்க… மிஸ்டர் பா. சீனிவாசன்தான் விகடன் ஓனர்… அவர்கிட்ட நான் Salaray Certificate-உம் வாங்க முடியாது… ஏன்னா நான் அங்கே வொர்க் பண்ணல… எப்பவாவது பத்து வருஷத்துக்கு ஒருக்கா…”
”சரி சார். விபரம்லாம் சரியா இருக்கு… உங்களுக்கு க்ரெடிட் கார்ட் நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணிருவோம்…”

***

கடந்த ஏழு ஆண்டுகளாக என் தெருவில் மட்டும் மின்வெட்டே இருந்தது இல்லை. என் வீட்டுக்குப் பக்கத்தில் இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வசித்தது காரணமாக இருக்கலாம். திமுக ஆட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும் ஒரு ‘கெத்து’ இருந்தது. பிறகு அதிமுக ஆட்சி வந்த போதும் அது தொடர்ந்தது. மின்வெட்டே ஆனது இல்லை.

***

திரும்பவும் லஜ்ஜையுடனும் கூச்சத்துடனும் வெட்கத்துடனும்தான் எழுதுகிறேன். ஒரு விபச்சாரி கூட ஓசியில் வேலை பார்க்க மாட்டாள். இந்த உலகத்தில் எல்லா வேலைகளுக்கும் கூலி இருக்கிறது. ஆனால் தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் கூலியே இல்லை. வெத்து ஓலு நித்திரைக்குக் கேடு என்பார்கள் கிராமப்புறங்களில்.

Product details

  • Format: Kindle Edition
  • File Size: 1761 KB
  • Print Length: 36 pages
  • Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
  • Language: Tamil
  • ASIN: B07PH1XS81
  • Word Wise: Not Enabled
  • Screen Reader: Supported
  • Enhanced Typesetting: Enabled
  • Average Customer Review: 4.0 out of 5 stars 1 customer review
  • Amazon Bestsellers Rank: #15,417 Paid in Kindle Store (See Top 100 Paid in Kindle Store)
  • Would you like to tell us about a lower price?


1 customer review

4.0 out of 5 stars

Review this product

Share your thoughts with other customers

13 March 2019
Verified Purchase
click to open popover