OR

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required. Learn more
Read instantly on your browser with Kindle for Web.
Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.
என் குரல்: 2017 ட்விட்டுகள் (ட்விட்டர் Book 8) (Tamil Edition) Kindle Edition
No reviews
|
- Kindle Edition
₹0.00 This title and over 1 million more available with Kindle Unlimited ₹49.00 to buy
எப்போதுமே சண்டைக்காரனாக அறியப்பட்டிருந்தவன், 16 வருட இடைவெளிக்குப் பின் இணையத்துக்கும் இலக்கியத்துக்கும் திரும்ப வந்தபின் போட்ட முதல் சண்டை இரண்டாவது மாதமே தொடங்கிவிட்டது. அது ட்விட்டரில்தான் நிகழ்ந்தது. அக்டோபரில் ட்விட்டர் மூலம் அறிமுகமானவனின் பழக்கம் பூசலாகி, நவம்பரில் முற்றி டிசம்பரில் நெடுங்கால நண்பருடனான உறவு முறிவில் போய் முடிந்தது. அது முழுவதும் இந்த நூலில் பதிவாகியுள்ளது.
இதில் வருத்தமேதுமில்லை. எது நடந்ததோ அது நல்லதற்கே நடந்தது என்பது விதிவாதமோ, ஆன்மீகமோ அன்று. மன அமைதிக்கு எந்த ஊறும் நேராது, இறுதிவரை ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான நடைமுறை சாத்தியமுள்ள சிறந்த அணுகுமுறை.
மனித உறவுகள் முக்கியம் என்பது உண்மைதான். ஆனால் நம்மைத் தாண்டி எவரும் முக்கியமில்லை. இது வெறும் திமிர் அன்று. வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களுடன் இருந்தாலும் உள்ளத்தின் அடி ஆழத்தில் எவருமே தனியர்தான். குடும்பத்திற்கே இதுதான் எனில், பொது வாழ்வில் கேட்கவே வேண்டியதில்லை.
எழுத்தாளன் எப்போதும் தனி மரமாய்தான் இருக்கவேண்டும். எப்போது வேண்டுமானாலும் எவரையும் தூக்கி எறியும் சுந்தந்திர மனநிலை இருக்கும்வரை மட்டுமே எழுத்து அவனோடு இருக்கும். இதனால்தான் பல எழுத்தாளர்கள் இறப்பதற்கு முன்பாக அவர்களிடம் இருக்கிற எழுத்து செத்துவிடுகிறது. இதை - ஒருமுறைக்கு மேல் இறந்து எழுத்துவந்த நான் சொல்கிறேன். என் சொல்லுக்கு சாட்சியம், என் எழுத்து மட்டுமே.
இறுதி மூச்சுவரை தரம் குறையாத எழுத்தாளனாக வாழ விரும்புதல் பேராசை. அதை அடைய, அவன் இழக்க வேண்டியது கொஞ்சநஞ்சமல்ல. பணம் புகழ் விருதுகள் என பெரிய பட்டியல் அவன் முன்னே சதா சர்வ காலமும் கவர்ச்சி நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறது.
உண்மையைச் சொல்லப்போனால்,
உண்மையான எழுத்தாளனுக்கு வாசகன் பொருட்டே இல்லை.
உண்மையான வாசகனுக்கு எழுத்தாளனின் உறவையும் நெருக்கத்தையும் விட முக்கியமானது அவன் எழுத்து மட்டுமே.
நல்ல ரசனையுள்ள வாசகன், எழுத்தாளனை விட்டு அகலுவதைவிட பெருத்த அவமானம் சிறந்த எழுத்தாளனுக்கு வேறு எதுவுமே இல்லை. அவனை தக்கவைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது எழுத்தின் ஆயுள் நீட்சி.
அன்பன்
விமலாதித்த மாமல்லன்
05.09.2020
- LanguageTamil
- Publication date5 September 2020
- File size1567 KB
Explore Our Collection Of Tamil eBooks
Click here to browse eBooks by Jeyamohan, Pa. Raghavan, Indira Soundarajan, Kalki and more authors.-
Next 3 for you in this series
₹147.00 -
₹490.00
Product details
- ASIN : B08HL9X2D1
- Publisher : சத்ரபதி வெளியீடு (5 September 2020)
- Language : Tamil
- File size : 1567 KB
- Simultaneous device usage : Unlimited
- Text-to-Speech : Not enabled
- Screen Reader : Supported
- Enhanced typesetting : Enabled
- Word Wise : Not Enabled
- Print length : 735 pages
- Best Sellers Rank: #620,239 in Kindle Store (See Top 100 in Kindle Store)
- #4,344 in Literary Criticism eBooks
- #5,348 in Humour (Kindle Store)
- #15,921 in Humour (Books)
About the author

1960ல் கன்னட – மராத்திய தாய் தந்தையருக்கு சென்னையில் பிறந்த விமலாதித்த மாமல்லன், தமது 21வது வயதில் கணையாழியில் வெளியான இலை சிறுகதை மற்றும் பெரியவர்கள் குறுநாவல் வழியே இலக்கிய உலகின் பரவலான கவனத்தை ஈர்த்தவர். 1994 முதல் 16 வருடங்கள் இலக்கிய உலகுடன் தொடர்பற்று இருந்தவர். 2010லிருந்து, விமர்சனம் படைப்பு என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். 62 வயதில், ஆபீஸ் என்கிற முதல் நாவலை madraspaper.com ல் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறார்.
விமலாதித்த மாமல்லனின் கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Customer reviews
5 star (0%) |
|
0% |
4 star (0%) |
|
0% |
3 star (0%) |
|
0% |
2 star (0%) |
|
0% |
1 star (0%) |
|
0% |